Friday, September 26, 2008

kaalankal...



காளான்கள்
புத்தன்போல் புலனடக்கிபுலன் தட்டி உணர்த்தும் அனைத்தும் அடக்கியபின்தனிமையின் உக்கிரம் நிரம்பியிருக்கும்நிசப்த இருட்டில்மழைக் காலத்து காளான்களாய்முளைத்து விடுகின்றனஉன் எண்ணங்கள்,வழக்கத்திற்கும் அதிகமாக…

இருட்டு!

பாவம் அந்த இருட்டு!
சரியான இருட்டு அதுதினமும் பகலை முழுமையாக கடித்து தின்றது.என் அறையின் ஓரமாய் ஒளிந்திருந்தமஞ்சள் வெளிச்சத்தையும் சேர்த்து தான்.இருட்டின் வக்கிரம் குறைய ஆரம்பித்ததேபகலை தின்றுவிட்டேனென்று நினைத்தபோதுதான்.களைப்பில்கொஞ்சம் தூங்கிவிட்டது.விழித்து பார்க்கும்போதுபகலும் மீள முயற்சித்ததுநேற்று தோற்றதால் ஏற்பட்ட வக்கிரத்தால் ஜெயித்துவிட்டது!இருட்டுக்கு இன்னமும் தெரியவில்லைமுழுசாய் பகலை தின்றுவிட்டேனென்று நினைத்தால்தான் அது தோற்றதென்றுபாவம் அந்த இருட்டு!

pidiththavai...!


பிடித்தவை
சன்னலோர இரவு நேர பேருந்து பயணம்
FMல் பிடித்த பாடல்களைக் கேட்பது
பிடித்த பாடல்களை பாடுவது (பக்கத்தில் இருப்பவர்கள் தான் பாவம்)
கவிதைகளைப் படிப்பது,எப்போதாவது எழுதுவது
மெரினா Beachல் கால் பதிய மணலில் நடப்பது (With my dear friends)
மழையின் போது வரும் மண்வாசனை
மழை
கோவை

காதல்...

உனக்கும் எனக்கும்
காதல் பிறந்தது.......
என்ன பெயர் வைக்கலாம்.....?